மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராஜருக்கு மு.க ஸ்டாலின் புகழாரம்!

 

மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராஜருக்கு மு.க ஸ்டாலின் புகழாரம்!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் குறித்து பதிவிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல , இன்று கர்மவீரர் காமராஜரின் நினைவு தினமும் அனுசரிக்கப்படுகிறது. அதன் படி, சென்னை மெரினாவில் காந்தி உருவப்படத்திற்கு முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட மலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதே போல, காமராஜரின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தவிருக்கின்றனர்.

மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராஜருக்கு மு.க ஸ்டாலின் புகழாரம்!

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அக்டோபர் 2 #கர்மவீரர் பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள்! தமிழர்கள் தலைநிமிரவும், தமிழக உரிமைக்காகவும் தன்னை அர்ப்பணித்த தனிப்பெரும் தலைவர்! ஏழைகள் ஏற்றம் பெறவும் – எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கவும் அவர் விரும்பினார். பெருந்தலைவரின் விருப்பத்தை நம் கடமையாகக் கொண்டு உழைப்போம்!” என காமராஜருக்கு புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராஜருக்கு மு.க ஸ்டாலின் புகழாரம்!

மேலும், “உலக உத்தமர் #MahatmaGandhi பிறந்தநாள் இன்று! சுதந்திரக் காற்றை வீசச் செய்த தேசத்தந்தை விரும்பிய சமத்துவ சமூகம் – நல்லிணக்க சமுதாயம் – அனைவருக்குமான நாடு அமைக்கப் போராடுவோம்! கிராமங்களே இந்தியாவின் இதயம் என்றார்; கிராமம் காக்க, விவசாயி வாழ நம்மை அர்ப்பணிப்போம்!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.