கொரோனாவால் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு! ஸ்டாலின் வேதனை

 

கொரோனாவால் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு! ஸ்டாலின் வேதனை

மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனாவால் உயிரிழந்திருப்பது வேதனையளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு! ஸ்டாலின் வேதனை

மதுரை மாநகராட்சி அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா, கொரோனா தொற்று காலத்திலும் தொடர்ந்து பணிக்கு வந்துகொண்டிருந்தார். அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சண்முகப்பரியாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஸ்டாலின், “மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்களப்பணி வீரராக – அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரும்பணி ஆற்றிய இளம் மருத்துவரை இழந்திருப்பது ஆழ்ந்த வேதனை தருகிறது.

மருத்துவர்கள் மற்றும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் முன்களப்பணி வீரர்களாக நிற்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்திட அறிவுறுத்தி இருக்கிறேன். மருத்துவர் சண்முகப்பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.