“மக்களை ஏமாற்ற ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி வருகிறார் அமைச்சர் ஆர்பி உதயகுமார்”

 

“மக்களை ஏமாற்ற ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி வருகிறார் அமைச்சர் ஆர்பி உதயகுமார்”

மதுரை மாவட்டம் ஆ.கொக்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் முக ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி 100 நாள் வேலை வாய்ப்பு பணியை 150 நாட்களாக உயர்த்தப்படும். விவசாய கடன் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் ஆட்சியில் 7 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது

10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்த மக்கள் நலத்திட்ட பணிகளும் நடைபெறவில்லை. திருமங்கலம் பிரதான கால்வாய் தூர்வாரபடவில்லை. மதுரை மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளை கொண்டுவந்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தவில்லை. மக்களை ஏமாற்ற ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி வருகிறார் ஆர்பி உதயகுமார். கோவில் கட்டுவது அவரது உரிமை ஆனால் ஆர்.பி.உதயகுமாருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்த ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மையை கண்டுபிடித்து வெளி கொண்டுவர முடியாமல் இருக்கிறார். ஜெயலலிதா மரணத்தை மூடி மறைத்து வருகிறார்கள். ஆறுமுகச்சாமி விசாரணை கமிஷன் அமைத்து இதுவரை எந்த செய்தியும் வெளிவரவில்லை. மரணத்தில் மர்மம் உள்ளதாக சொன்னது திமுக அல்ல துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் . அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் விலை உயர்வு இருந்தாலும் வரியை குறைத்தால் விலை உயர்வு கட்டுக்குள் இருந்தது.

எம்ஜிஆர், அண்ணா ஆகியோர் முதல்வராக இருந்தபோது மரணமடைந்தாலும் மரணத்திற்கான உண்மை நிலையை அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மரணம் குறித்து காரணம் முறையாக தெரிவிக்கப்படவில்லை. ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கான காரணத்தை முக.ஸ்டாலினாகிய நான் வெளி கொண்டு வருவேன். கொரோனோ நோயை பயன்படுத்தி கொள்ளையடித்துள்ள ஆட்சி அதிமுக. கொரோனோ காலத்தில் ப்ளீச்சிங் பவுடர், துடைப்பம் வாங்கியதிலும், கொரோனோ பரிசோதனை செய்ததிலும் ஊழல் செய்துள்ளது.

“மக்களை ஏமாற்ற ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி வருகிறார் அமைச்சர் ஆர்பி உதயகுமார்”

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர உள்ளது என்ற நம்பிக்கை எங்களை விட உங்களிடத்தில் அதிகரித்துள்ளது. சென்னை திருபெரும்பதூரில் இன்று முதல்வர் பழனிச்சாமி புத்திசாலிதனமாக பேசியுள்ளார் . நேரடியாக வாக்கு போட்டு எந்த முதல்வரும் தேர்வு செய்யப்படுவதில்லை என பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பழனிச்சாமி எப்படி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவை பொறுத்தவரை அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்ததில்லை. கவிழ்க்க நினைத்திருந்தால் ஒரே நொடியில் கவிழ்த்திருப்போம். கொல்லை புறமாக ஆட்சிக்கு வர வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. அவ்வாறு வருவதை கலைஞர் எங்களுக்கு சொல்லி கொடுக்கவில்லை . மக்களை சந்தித்து நாங்கள் ஆட்சிக்கு வருவோம்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பழனிச்சாமி என அழைக்கவும் எடப்பாடி ஊர் பெயரை கூறி அழைக்க வேண்டாம் என எடப்பாடி மக்கள் தெரிவித்தனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2019ல் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இன்றளவும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் அமைக்கவிடவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்த அமைச்சர் ஆர்பி உதயகுமார் இதுவரை ஏன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர் ராஜினாமா செய்ய தேவையில்லை இன்னும் 4 மாதங்களில் மக்களே தூக்கி எறிவார்கள். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை” எனக் கூறினார்.