ஈபிஎஸ்-ஓபிஎஸ் விவகாரம்: யார் காலை யார் வேண்டுமானாலும் வாரலாம் என காத்திருக்கிறார்கள்- ஸ்டாலின்

 

ஈபிஎஸ்-ஓபிஎஸ் விவகாரம்: யார் காலை யார் வேண்டுமானாலும் வாரலாம் என காத்திருக்கிறார்கள்- ஸ்டாலின்

கள்ளக்குறிச்சியில் நடைபெறும் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு காணொளி காட்சியின் மூலம் உரையாற்றினார்.

அப்போது பேசிய ஸ்டாலின், “கொரோனா காலத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு சுழற்சி முறையில் மூன்று வேலை உணவு பொருட்கள், உதவிகள் செய்து வருகிறோம். மத்திய அரசின் வேளாண்மை சட்டதிற்கு அதிமுக அரசு துரோகம் செய்கிறது. பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வேளாண் சட்டத்தை பற்றி பொய்யான விளம்பரம் செய்கிறார்கள். நானும் விவசாயி தான் என கூறும் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுடன் சேர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் கஜானாவை நிரப்ப பார்க்கிறார். முதலில் ஓ.பி.எஸ்க்கு சசிகலாவிற்கும் சண்டை வந்தது. அடுத்து ஓ. பி.எஸ்- எடப்பாடிக்கும் சண்டை. இப்போது எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்க்கும் சண்டை. காலில் விழுந்து பதவி பெற்றவர்கள், இப்போது யார் காலை யார் வாரலாம் என் காத்திருக்கிறார்கள்.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் விவகாரம்: யார் காலை யார் வேண்டுமானாலும் வாரலாம் என காத்திருக்கிறார்கள்- ஸ்டாலின்

ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியுமா என எடப்பாடி கேட்கிறார். விவசாயியின் மீது உண்மையான அக்கறை இருந்தால் போதும். நான் விவசாயி என என்றும் சொன்னதில்லை. ஆனால் விவாசாயிகளின் கஷ்டத்தை நன்கு அறிவேன். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் அமைக்க ஓ.பி.எஸ் தர்ம யுத்தம் நடத்தினார். அவரே விசாரணை கமிஷனின் இதுவரை ஆஜர் ஆகவில்லை. ஜெயா மரணம் தொடர்பாக விஜயபாஸ்கரை விசாரிக்கவில்லை.
அனைவரும் சேர்ந்து சேகர்ரெட்டியை காப்பற்றியுள்ளனர். ஆட்சி இன்னம் 6 மாதம் மட்டுமே இருப்பதால் ஒன்றாக இருந்து கொல்லை அடிப்போம் என சபதம் எடுத்துள்ளனர். இது ஆட்சி இல்லை வீழ்ச்சி.

வேளாண் தொடர்பான சட்டம் இயற்றுவதற்கான உரிமை மாநிலங்களுக்கு உள்ளது. மாநில பட்டியலில் தான் உள்ளது. விவசாய சட்டத்தை ஆதரித்து விட்டு விவசாயி என எடப்பாடி வேஷம் போடுகிறார். மாநிலம் விட்டு மாநிலம் சென்று விவசாயியால் பொருட்களை விற்க முடியுமா? குறைந்த பட்ச ஆதார விலை பற்றி சட்டத்தில் குறிப்பிட வில்லை. பண்ணை ஓப்பந்தம் என இடைதரகர்களை நுழைகிறார்கள். இதற்காக நிர்மலா சென்னை வந்து பாடம் நடத்தி செல்கிறார்” எனக் கூறினார்.