மீண்டும் முழுஊரடங்கு இல்லை- முதலமைச்சர் ஸ்டாலின்

 

மீண்டும் முழுஊரடங்கு இல்லை- முதலமைச்சர் ஸ்டாலின்

மீண்டும் முழுஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மீண்டும் முழுஊரடங்கு இல்லை- முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு உத்தரவிட்டுவருகிறது. தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியதால் நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் ஒரு தலைவலி என்றால், ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றொரு தலைவலியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ள உள்ள சவால்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது என்று தொழிலதிபர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மீண்டும் முழு ஊரடங்கு நிலை வந்தால் தொழிதுறையினர் மற்றும் வணிகர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.