சமூக நீதிக்கு குழி தோண்டி கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு- ஸ்டாலின்

 

சமூக நீதிக்கு குழி தோண்டி கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு- ஸ்டாலின்

மதுரை தெப்பக்குளம் பகுதியில் மக்கள் விடுதலை கட்சி சார்பில் தமிழகம் காப்போம் என்ற மாநாடு நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் பங்கேற்று மாநாடு சிறப்புறையாற்றினர்.

அப்போது பேசிய அவர், “தமிழகம் மீட்போம் என்ற முழக்கத்தில் தொடர்ந்து காணொளி காட்சிமூலம் அனைத்து மாவட்டங்களில் மக்களிடம் பேசி வருகின்றேன். தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்டு இருந்தததை மீட்டெடுக்க ஒன்று கூடியுள்ளோம்.

சமூக நீதிக்கு குழி தோண்டி கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு- ஸ்டாலின்

திமுக ஆட்சியில் ஆதிதிராவிட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்தார். அனைத்து சமுகத்தினரும் அர்சகராகலாம் என்ற திட்டத்தினை கொண்டு வந்தவர் கலைஞர். ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு திமுக ஆட்சி. ஆனால் இன்று தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி அப்படி இல்லாததால் தான் தமிழகத்தை மீட்போம், காப்போம் என மக்களிடம் நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். கூட்டணி வைப்பது தவறில்லை , அப்படி வைக்கப்படும் கூட்டணியால் தமிழகத்திற்கு என்ன நன்மை செய்தார்கள். மோடி ஆட்சி மூலம் எடப்பாடி.பழனிசாமி என்ன திட்டத்தினை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இன்றைக்கு பதவியை காப்பாற்ற மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறது.

காமராஜர் நேரு பிரதமராக இருந்தபோது பல்வேறு நன்மை பயக்கும் திட்டங்களை கேட்டு பெற்றனர். மேலும் கூட்டணியில் இருந்த போதே மருத்துவர் கலைஞர், அவசர பிரகடனத்தை வெளிப்படையாக எதிர்த்தவர். குறிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை என்ன..? அதற்கான நிதி எங்கே..? அதிமுக ஆட்சியில் நல்ல திட்டம் ஏதும் இல்லை. இனியும் பொறுக்க முடியாது பொங்கி எழுவோம். சமூக நீதியை எதிர்த்தால் அது திமுகவை எதிர்ப்பது போன்றது. சமூக நீதிக்கு குழி தோண்டி கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. அதனை வேடிக்கை பார்க்கிறது அதிமுக அரசு. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரைப் பார்த்து இன்னமும் சிலருக்கு பயம் இருக்கிறது; உண்மையை அழுத்தமாக பேசியதால்தான் திராவிடத்தை அழிக்க முடியவில்லை” என பேசினார்.