தொகுதி மக்களுக்காக களமிறங்கிய ஸ்டாலின்… வியக்கும் திமுகவினர்!

 

தொகுதி மக்களுக்காக களமிறங்கிய ஸ்டாலின்… வியக்கும் திமுகவினர்!

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ள இந்த காலகட்டம் மிகவும் சவாலானதாக உள்ளது. கொரோனா பேரிடரை எதிர்கொள்ள ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழக அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளுக்கும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் முதல்வர் ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை கண்காணிக்க மாவட்டவாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொகுதி மக்களுக்காக களமிறங்கிய ஸ்டாலின்… வியக்கும் திமுகவினர்!

இந்நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். வார்டு 69-இல் உள்ள திரு.வி.க.நகர் மண்டலம் 6-இல் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக சார்பில் தினமும் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த அவர், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுகளை பரிமாறினார்.

தொகுதி மக்களுக்காக களமிறங்கிய ஸ்டாலின்… வியக்கும் திமுகவினர்!

இதை தொடர்ந்து கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்ற அவர், திமுக சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு, உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களையும் வழங்கினார். முதல்வரானாலும் தனது வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்த தொகுதி மக்களுக்கு, பேரிடர் காலத்திலும் தானே நேரில் வந்து ஸ்டாலின் உதவுவது மகிழ்ச்சியை அளிப்பதாக திமுகவினர் சிலாகித்து வருகிறார்கள்.