Home தமிழகம் சொத்துவரி: வலது கையால் கொடுத்த சலுகையை இடது கையால் பறிப்பதா?- ஸ்டாலின்

சொத்துவரி: வலது கையால் கொடுத்த சலுகையை இடது கையால் பறிப்பதா?- ஸ்டாலின்

அரையாண்டுச் சொத்துவரி ரூ.5000-க்குள் செலுத்துவோருக்கான ஊக்கத்தொகையை 10% ஆக அதிகரித்தும், அரையாண்டு முடிந்து சொத்துவரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகைக்கான கால அவகாசத்தை 45 நாட்களாக அதிகரித்தும் சென்னை மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் வருமானம் இன்றி தவித்ததால் கடந்த ஏப்ரல் மாதமே செலுத்த வேண்டிய கடந்த ஜூன் மாதம் சொத்து வரிக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அவகாசம் முடிவடைந்த நிலையில், சென்னையில் சொத்துவரியைச் செலுத்தாத மக்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் அரையாண்டு சொத்துவரியை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் 2 சதவீத அபராத தொகை விதிக்கப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்தது.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ““ஒவ்வோர் அரையாண்டும் முடிந்து 15 தினங்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை”, “அப்படிச் செலுத்தத் தவறினால் 16-ஆவது நாளில் இருந்து 2 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும்” என்று, சென்னை மாநகராட்சி அறிவித்திருப்பது, “வலது கையால்” ஒரு சலுகையைக் கொடுத்து விட்டு, “இடது கையால்” அதைப் பறித்துக் கொள்வது போல் அமைந்திருக்கிறது.

கொரோனா பேரிடர் காலத்தில் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து – மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குச் சிரமப்பட்டு, தற்போதுதான் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பலர் வேலை இழப்புகளைச் சந்தித்து, இன்னமும் கூட வேலை கிடைக்காமல், தங்கள் குடும்பத்திற்கு வருமானம் இன்றி வாழ்க்கையை நகர்த்த முடியாமல் தவிக்கிறார்கள்.

சில்லறை வணிகர்கள், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருப்போர், இன்னும் வருமான ரீதியாக குடும்பச் செலவுகளைக் கூடச் சமாளிக்க இயலாமல் நாள்தோறும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே இதுபோன்ற சூழலில், முதல் அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் 15 தேதிக்குள்ளோ, இரண்டாவது அரையாண்டு வரியை அக்டோபர் 1 முதல் 15 தேதிக்குள்ளோ கட்டவில்லை என்றால், அவர்களுக்கு ஊக்கத்தொகை இல்லை என்பதும், அதுமாதிரி செலுத்தத் தவறியவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்பதும், சிறிதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல !

கொரோனாவின் காரணமாக, பொருளாதார- வருமானச் சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சென்னை மக்களை, மாநகராட்சி இப்படி மேலும் துயரப்படுத்துவது, எவ்விதத்திலும் சரியல்ல.

எல்லா மட்டத்திலும் டெண்டர் ஊழலில் மக்களின் வரிப்பணம் தண்ணீர் போல் வாரியிறைத்துச் செலவழிக்கப்பட்டு, எடப்பாடி ஆட்சியில் ஊழலின் ஊற்றுக் கண்களில் ஒன்றாக இருக்கும் சென்னை மாநகராட்சி, சொத்து வரி வசூலில் இவ்வளவு கெடுபிடிகள் செய்ய வேண்டியதில்லை.

ஏழை எளிய, நடுத்தர மக்கள் செலுத்தும் சொத்து வரியில், “அபராதம்” விதிக்கும் கெடுபிடியும் – ஊக்கத் தொகை 15 நாட்களுக்கு மட்டுமே அளிப்போம் என்பதும், மக்கள் நலத் திட்டம் அல்ல; மக்களை நச்சரிக்கும் திட்டமே ஆகும்!

எனவே, கொரோனா பேரிடர் பாதிப்புகளை மனதில் வைத்து, ஒவ்வொரு அரையாண்டிற்கும் ஊக்கத் தொகை அளிக்க வழங்கப்பட்டிருக்கும் 15 நாட்கள் கால அவகாசத்தை, குறைந்த பட்சம் 45 நாட்களாக உயர்த்தி – அரையாண்டு வரி 5000 ரூபாய்க்குள் செலுத்துவோருக்கு இந்த ஊக்கத் தொகையை 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் தற்போதுள்ள 2 சதவீத அபராதத் தொகையை அரை சதவீதமாகக் குறைத்திட வேண்டும் அல்லது அறவே ரத்து செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட செய்திகள்

Most Popular

10 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது: போடி போலீசார் அதிரடி

கைகளில் குறைந்த அளவு கஞ்சா வைத்து இருந்தாலே அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க சட்டம் இருக்கும் நிலையில், 10 கிலோ கஞ்சா கொண்டு சென்று பெண்ணை கைது செய்துள்ளனர்...

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தல்!

மதுரை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் கடத்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. சமீப காலமாக பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்களை அவமதிக்கும் செயல்கள்...

தியேட்டர்கள் திறப்பு : அக்டோபர் 28 ஆம் தேதி சுகாதார குழுவுடனான ஆலோசனைக்கு பின் முடிவு!

தியேட்டர்கள் திறப்பு குறித்து அக்டோபர் 28 ஆம் தேதி சுகாதார குழுவின் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர்...

திருமங்கலம் :தம்பியை கல்லால் அடித்து கொலை செய்த அண்ணன் தலைமறைவு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சோழவந்தான் சாலையில் உள்ள செங்குளம் 11வது தெருவில் வசிப்பவர் மருதன். இவரது மகன்கள் தினேஷ்குமார்(27), பாண்டியராஜ். இவர்களில் தினேஷ்குமார் கல்லூரி நான்காம் ஆண்டு படித்து வருகிறார்....
Do NOT follow this link or you will be banned from the site!