ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் மு.க.ஸ்டாலின்!

 

ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 159 தொகுதிகளை கைப்பற்றி திமுக ஆட்சி அமைக்க உள்ளது. தேர்தலில் தோல்வியை தழுவியதால் எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, வரும் 7ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரும் மு.க.ஸ்டாலின்!

கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டுகிறது திமுக. அக்கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் நாளை மாலை 6.30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.