“ஜெயலலிதாவிடமே கொள்ளையடித்த எத்தனுக்கு எத்தன்” – ஸ்டாலின் பேச்சால் நமநமத்து போன ‘நத்தம்’

“ஜெயலலிதாவிடமே கொள்ளையடித்த எத்தனுக்கு எத்தன்” – ஸ்டாலின் பேச்சால் நமநமத்து போன ‘நத்தம்’

அனைத்து கட்சிப் பணிகளையும் முடித்த கையோடு திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கினார். நேற்று சேலம், நாமக்கலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இன்று நத்தம் – வடமதுரையில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

“ஜெயலலிதாவிடமே கொள்ளையடித்த எத்தனுக்கு எத்தன்” – ஸ்டாலின் பேச்சால் நமநமத்து போன ‘நத்தம்’

நத்தம் வேட்பாளர் ஆண்டி அம்பலத்துக்கு ஆதரவாகப் பேசிய ஸ்டாலின், “நத்தம் தொகுதியில் நம்மை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுகவின் வேட்பாளர் நத்தம் விஸ்வநாதனைப் பற்றி நான் அதிகம் உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்றுகூட, பணப் பட்டுவாடா செய்ததாக அவர் மேல் ஒரு வழக்கு பதிவு செய்ப்பட்டுள்ளது.

“ஜெயலலிதாவிடமே கொள்ளையடித்த எத்தனுக்கு எத்தன்” – ஸ்டாலின் பேச்சால் நமநமத்து போன ‘நத்தம்’

ஜெயலலிதாவிடமே கொள்ளையடித்தவர் நத்தம் விஸ்வநாதன். அதனால் தண்டனையும் பெற்றார். அப்படியென்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எத்தனுக்கு எத்தன். அவ்வாறு கொள்ளையடித்த காரணத்தால் 10 நாட்கள் அவரைப் பூட்டி வைத்திருந்தார்கள். அதுமட்டுமல்ல, அவருக்குக் கடந்த தேர்தலில் வேட்பாளராக வாய்ப்பு தரக்கூடாது என்று முடிவு செய்தார்கள். அதனால்தான் நத்தம் தொகுதியில் கொடுக்காமல் ஆத்தூர் தொகுதியைக் கொடுத்தார்கள். அதற்கெல்லாம் நீங்கள் சரியான பதில் வழங்க வேண்டும்” என்றார்.