‘அவரு தான் நடிக்கிறாரு.. எனக்கு அந்த அவசியமில்லை’ : மு.க. ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!

 

‘அவரு தான் நடிக்கிறாரு.. எனக்கு அந்த அவசியமில்லை’ : மு.க. ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!

விவசாயி போல முதல்வர் பழனிசாமி மக்கள் மத்தியில் நடிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்‘ என்ற பெயரில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மு.க ஸ்டாலின். 10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் இருந்த போது செய்த சேவைகளையும், தற்போது இருக்கும் அதிமுக அரசின் குறைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார்.

‘அவரு தான் நடிக்கிறாரு.. எனக்கு அந்த அவசியமில்லை’ : மு.க. ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘விவசாயியாக நடிக்கிறவர் பழனிசாமி தான். நான் அல்ல. உழைத்து தியாகம் செய்து அரசியலில் முன்னுக்கு வந்தவன் நான். நாட்டு மக்களுக்கு அது தெரியும். அவருக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. 1966ல் கட்சி தொடங்கியதில் இருந்து கட்சிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கழகத்தின் வெற்றிக்காக உழைத்தவன் நான். திருமணமாகி 5 மாதத்திலேயே கட்சிக்காக ஒரு ஆண்டு காலம் சிறையில் அடைபட்டு கிடந்தேன்’ என்று கூறினார்.

‘அவரு தான் நடிக்கிறாரு.. எனக்கு அந்த அவசியமில்லை’ : மு.க. ஸ்டாலின் ஆவேசப் பேச்சு!

மேலும், 1984ம் ஆண்டு கழக அலுவலகத்தை காலி செய்ததோடு அங்கிருந்து பொருட்களையெல்லாம் எடுத்து வெளியே வீசிய அராஜகத்தை கண்டித்து போராடியதால் கைது செய்யப்பட்டேன். அதிமுக அரசை எதிர்த்து கண்டித்து போராடிய கருணாநிதி உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்ட போது வெளியே இருந்து அவர்களுக்காக போராடிய என் மீது பொய் வழக்கு போட்டார்கள். இவ்வாறு சிறு வயதில் இருந்தே திமுகவுக்காக போராடியவன் நான். ஊழலுக்காக சிறை சென்ற முதல்வர் என்பது அதிமுக ஆட்சியில் தான் நடந்தது. 3 மாதத்துக்கு பின் அதிமுகவினர் இருக்க வேண்டிய இடம் கோட்டை இல்லை, புழல் சிறை என்று ஆவேசமாக பேசினார்.