‘பீகார் மாடல்: மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்களிப்பு முறை’ – மு.க ஸ்டாலின் கண்டனம்!

 

‘பீகார் மாடல்: மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்களிப்பு முறை’ – மு.க ஸ்டாலின் கண்டனம்!

பீகார் மாநிலத் தேர்தலின் போது பின்பற்றப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான தபால் வாக்குமுறையை பின்பற்றுமாறு அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘பீகார் மாடல்: மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்களிப்பு முறை’ – மு.க ஸ்டாலின் கண்டனம்!

அந்த அறிக்கையில், ” பீகார் மாடல்- கடைபிடிக்கப்பட வேண்டும் என அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி பேரதிர்ச்சி அளித்திருக்கிறது. பீகார் தேர்தலில் 80 வயதுக்கு அதிகமான மூத்த குடிமக்களும் மாற்றுத்திறனாளிகளும் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்கள் என்ற புதிய வகையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தபால் வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பூத் லெவல் அதிகாரி வீட்டுக்கு சென்று தபால் வாக்கு சீட்டை கொடுப்பார், வாக்குகள் பெற்ற வாக்குச் சீட்டை திரும்ப வாங்கி வந்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைப்பார். இதுதான் அந்த மாடல்.

‘பீகார் மாடல்: மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்களிப்பு முறை’ – மு.க ஸ்டாலின் கண்டனம்!

வாக்காளரின் வயது உரிய முறையில் சரி பார்க்கப்படுவதில்லை. மாற்றுத்திறனாளி என்று வகைப்படுத்த இருக்கும் எந்த விதிமுறையும் வகுக்கப்படவில்லை. தபால் வாக்களிப்பு முறைக்கு தகுதி படைத்தவர்கள் என்ற பட்டியலும் முன்கூட்டியே அறிவிக்கப்படாத இப்படி ஒரு குளறுபடி தான் நாடு முழுவதிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. நேரடியாக தபால் வாக்குச்சீட்டுகளை கொண்டு போய் கொடுத்து வாக்குகள் பதிந்து பெறுவது என்பது ரகசியமான சுதந்திரமான வாக்கெடுப்பு முறையையும், ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கி விடும். ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையே ஒரு சமமான நேர்மையான தேர்தல் களத்தை உருவாக்காது.

பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் துணைபோகும் பாரபட்சமான முயற்சிகளில் நடுநிலையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டாம். அனைத்து அரசியல் கட்சிகளுடன் விவாதித்து ஆரோக்கியமான ஜனநாயகத்தை எண்ணத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.