ஸ்டாலின் இதுவர அவங்க பேர கூட உச்சரிக்கலயே… இது வேற லெவல் அரசியலா இருக்கே! – பிரச்சாரத்துல கவனிச்சீங்களா?

ஸ்டாலின் இதுவர அவங்க பேர கூட உச்சரிக்கலயே… இது வேற லெவல் அரசியலா இருக்கே! – பிரச்சாரத்துல கவனிச்சீங்களா?

நமக்குச் சரியான எதிரி யார் என்பதைத் தீர்மானித்து அவர்களுடன் சமபலத்துடன் போட்டியிட வேண்டும் என்பது அரசியலில் எழுதப்படாத விதி. அதைச் சரியாகப் பயன்படுத்தி பிரச்சாரத்தில் அதகளம் செய்துகொண்டிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். தேர்தல் அறிவிப்புக்குப் பின் பல இடங்களுக்குச் செல்கிறார். பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், அதிமுக, பாஜக என அடங்கிவிடுகிறது அவருடைய பிரச்சாரம். வேறு யாரையும் பற்றி மறந்தும் கூட அவர் பேசுவதே இல்லை. மூன்றாவது அணி ஒன்று இருப்பதையே அவர் மறந்துவிட்டாரோ என்ற ஐயம் கூட எழுகிறது.

ஸ்டாலின் இதுவர அவங்க பேர கூட உச்சரிக்கலயே… இது வேற லெவல் அரசியலா இருக்கே! – பிரச்சாரத்துல கவனிச்சீங்களா?

ஆனால் அந்தப் பக்கம் நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது. மூன்றாவது அணியாக மாற்றம் முன்னேற்றம் என கத்திக் கொண்டிருக்கும் சீமான், நேற்று வந்த கமல், டிடிவி தினகரன் ஆகிய மூவரும் ஆட்சியில் இருக்கும் அதிமுகவைக் காட்டிலும் திமுகவையே கடுமையாக விமர்சிக்கின்றனர். அதிமுக ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை; திமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் அதனால் அவர்களை அதிகமாக விமர்சிக்கிறோம் என வினோத காரணத்தை நாம் தமிழர் கட்சியினரும் மக்கள் நீதி மய்யத்தாரும் முன்மொழிகின்றனர். ஆனால் தேர்தலுக்கு முன்பிருந்தே திமுகவைத் தான் அவர்கள் அதிகமாக விமர்சித்திருப்பது ஆகச்சிறந்த நகைமுரண்.

ஸ்டாலின் இதுவர அவங்க பேர கூட உச்சரிக்கலயே… இது வேற லெவல் அரசியலா இருக்கே! – பிரச்சாரத்துல கவனிச்சீங்களா?

அவர்கள் கூறும் காரணமெல்லாம் இல்லை. திமுக விமர்சித்தால், ஆவர்தங்களுக்கு வெளிச்சம் கிடைக்கும் என்ற அடிப்படையில் அவர்கள் செயல்படுவதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதெல்லாம் இல்லை திமுகவை எதிர்க்க டெல்லி பிக்பாஸின் செட்டப் டீம்கள் என்று இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள். அதை விட்டுவிடுவோம் ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு வருவோம். இவர்கள் எப்படி திட்டி தீர்த்தாலும் ஸ்டாலின் மருந்துக்குக் கூட இவர்கள் பெயரை உச்சரிப்பதே இல்லை. இதன் சூட்சுமம் என்ற என்று வினவினால், மக்கள் நலக் கூட்டணியின் பிளான் என்கிறார்கள். கடந்த தேர்தலில் பெற்ற அனுபவமோ…

ஸ்டாலின் இதுவர அவங்க பேர கூட உச்சரிக்கலயே… இது வேற லெவல் அரசியலா இருக்கே! – பிரச்சாரத்துல கவனிச்சீங்களா?

அவர்கள் எப்படி பேசினாலும் வம்புக்கிழுத்தாலும் நம் கூட்டணி தரப்பிலிருந்து எதிர்வினையை இருக்கக் கூடாது என்பது பிளான் ஏ. நாம் கண்டுகொள்ளவில்லை என்றால் அவர்களே பேசி களைப்படைந்து விடுவார்கள் என்பது பிளான் பி. முக்கிய எதிரியாக பாஜக-அதிமுகவை முன்னிறுத்தி மூன்றாம் அணிக்கு வாக்கைச் சிதறவிடக் கூடாது என்பது பிளான் சி. இவர்கள் இத்தனை பிளான்களை வைத்திருந்தாலும், ஸ்டாலினுக்கு இந்த ஐடியா ஏற்கெனவே இருந்ததாம். உதாரணமாக அவருடைய நேர்காணலின் பதில்களிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

ஸ்டாலின் இதுவர அவங்க பேர கூட உச்சரிக்கலயே… இது வேற லெவல் அரசியலா இருக்கே! – பிரச்சாரத்துல கவனிச்சீங்களா?

ஒரு நேர்காணலில் கமல் குறித்த கேள்விக்கு நல்ல நடிகர் என ரத்தின சுருக்கமாக முடித்துக்கொண்டார். ரஜினி கட்சி குறித்து கேள்வி கேட்டதற்கு நான் சீரியஸான அரசியல் பேசிக்கொண்டிருக்கிறேன் என சர்காஸ்டிக்காகப் பதிலடித்து நிரூபர்களை வாயடைக்க வைத்தார். தேர்தலுக்கு முன்பிருந்தே அதிமுக-பாஜகவையே பிரதான எதிரியாக சித்தரிக்க வேண்டும் என்பதே ஸ்டாலின் கிளியர் விஷனாக இருந்துள்ளது. கூட்டணிக் கட்சியினரும் அதையே கூறியதால் ஸ்டாலினுக்கு ஏகத்துக்கும் குஷியாம். இந்தச் செயல்திட்டத்தின் அடிப்படையிலேயே பிரச்சாரம் போய்க் கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட சீமான், கமல், டிடிவி தினகரன் குறித்து பேசுவதே இல்லை கவனித்தீர்களா…வேற லெவல் அரசியலா இருக்கே!