‘ஆதிக்கத்திற்கு இடமின்றி அன்பால் இணைவோம்’ – மு.க.ஸ்டாலின், திருமாவளவன் வாழ்த்து!

‘ஆதிக்கத்திற்கு இடமின்றி அன்பால் இணைவோம்’ – மு.க.ஸ்டாலின், திருமாவளவன் வாழ்த்து!

ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொண்டாடப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு ‘யுகாதி பண்டிகை’ என்று அழைக்கப்படுகிறது. யுகாதி என்பதற்கு தொடக்கம் என்பது பொருள். அதன் படி, இந்த தொடக்கம் இனிதே அமைய அரசியல் தலைவர்கள் பலர் யுகாதி பண்டிகைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

‘ஆதிக்கத்திற்கு இடமின்றி அன்பால் இணைவோம்’ – மு.க.ஸ்டாலின், திருமாவளவன் வாழ்த்து!

இந்த நிலையில் உகாதி பண்டிகைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், திராவிட மொழிக் குடும்ப உறவின் அடையாளமான தென்னிந்திய நிலப்பரப்பைச் சேர்ந்த தெலுங்கு – கன்னட மொழி மக்களுக்கு இனிய உகாதி புத்தாண்டு வாழ்த்துகள்! அவரவர் மொழிகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் போற்றிப் பாதுகாத்து, ஆதிக்கத்திற்கு இடமின்றி, அன்பால் இணைந்து சகோதரத்துவம் காத்திடுவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘ஆதிக்கத்திற்கு இடமின்றி அன்பால் இணைவோம்’ – மு.க.ஸ்டாலின், திருமாவளவன் வாழ்த்து!

அதே போல, விசிக தலைவர் தொல்.திருமாவளவனும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ‘#யுகாதி: தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் யாவருக்கும் விசிக சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டைப்போலன்றி, இந்தப் புதிய ஆண்டு மக்களுக்கு #மகிழ்ச்சியும்_அமைதியும் அளிப்பதாக அமைந்திட வேண்டுமென வாழ்த்துகிறேன். கொரோனா பேரிடர் ஒழியட்டும்’ என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.