அள்ளிக்கொடுத்த டெல்டாவை கைவிட்ட ஸ்டாலின்!

 

அள்ளிக்கொடுத்த டெல்டாவை கைவிட்ட ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கிறார். அவருடன் பதவியேற்கும் அமைச்சர்கள் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. கருணாநிதி காலத்து அமைச்சரவையில் இருந்த அனுபவம் வாய்ந்த 15க்கும் மேற்பட்டோருக்கு ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல 10க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.

அள்ளிக்கொடுத்த டெல்டாவை கைவிட்ட ஸ்டாலின்!

மண்டலங்களாகப் பிரித்துப் பார்த்து அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அந்த வகையில் டெல்டா மண்டலத்திலுள்ள தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய 18 தொகுதிகள் உள்ளன. இதில் 15 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றுள்ளது. இதில் பட்டுக்கோட்டை தொகுதியை 20 ஆண்டுகளுக்குப் பிறகும் பேராவூரணி தொகுதியை 52 ஆண்டுகளுக்குப் பிறகும் திமுக கைப்பற்றியிருக்கிறது. தஞ்சாவூரில் ஒரத்தநாடு தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளையும் தனதாக்கியிருக்கிறது.

அள்ளிக்கொடுத்த டெல்டாவை கைவிட்ட ஸ்டாலின்!

ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் பட்டியலில் ஒருவர் கூட ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒருவேளை ராஜ்யசபா எம்பி பதவி கொடுக்கப்படுமா என்பது குறித்தும் எதுவும் தெரியவில்லை. கட்சிகளில் மிகப் பெரிய பொறுப்புகள் கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. மாவட்ட வாரியாக அமைச்சர்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

சென்னை – 3
கடலூர் – 2
திண்டுக்கல் – 2
திருச்சி – 2
திருப்பூர் – 2
தூத்துக்குடி – 2
மதுரை – 2
விருதுநகர் – 2
விழுப்புரம் – 2
புதுக்கோட்டை – 2
ஈரோடு – 1
கரூர் – 1
கன்னியாகுமரி – 1
காஞ்சிபுரம் – 1
சிவகங்கை – 1
திருவண்ணாமலை – 1
திருவள்ளூர் – 1
நாமக்கல் – 1
நீலகிரி – 1
ராமநாதபுரம் – 1
பெரம்பலூர் – 1
ராணிப்பேட்டை – 1
வேலூர் – 1