இன்டர்வியூ வைத்து வேட்பாளர்களை செலக்ட் செய்யும் ஸ்டாலின்… சில கன்டிஷன்களோடு!

இன்டர்வியூ வைத்து  வேட்பாளர்களை செலக்ட் செய்யும் ஸ்டாலின்… சில கன்டிஷன்களோடு!

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவித்த உடனே அரசியல் களம் சூடுபிடிக்கும் என்று கூறப்பட்டது. கூறியதை விட உக்கிரமாகவே இருபெரும் கட்சிகளான அதிமுக, திமுக களத்தில் இறங்கி வேலை பார்க்கிறார்கள். நிமிடத்திற்கு நிமிடம் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் குறித்த பரிசீலனை என நகர்கிறது அரசியல் களம். தற்போது திமுக தலைமைக் கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இன்டர்வியூ வைத்து  வேட்பாளர்களை செலக்ட் செய்யும் ஸ்டாலின்… சில கன்டிஷன்களோடு!

வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு-புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு போட்டியிட விரும்பி விண்ணப்பம் செலுத்தியவர்களை கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதிவரை நேர்காணல் செய்கிறார். மாவட்ட வாரியாக சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கழக அலுவலகத்தில் நடைபெறவிருக்கும் இந்த நேர்காணலில் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் ஆகியவை குறித்து ஆராயவிருக்கிறார்.

இன்டர்வியூ வைத்து  வேட்பாளர்களை செலக்ட் செய்யும் ஸ்டாலின்… சில கன்டிஷன்களோடு!

குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் மட்டுமே அவர வேண்டும். அவர்களைத் தவிர வேறு யாரும் வரக் கூடாது. வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதாரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்துவரக் கூடாது. அவர்களை நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க முடியாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.