புதிய கட்சி தொடக்கமா? மு.க அழகிரி நாளை ஆலோசனை : 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு?

 

புதிய கட்சி தொடக்கமா? மு.க அழகிரி நாளை ஆலோசனை : 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு?

மு.க அழகிரி தலைமையில் சென்னையில் நாளை நடக்கவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்க 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

திமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ஆதரவாளர்கள் ஒப்புதல் அளித்தால் புதிய கட்சி தொடங்குவேன் என்ற திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான கூட்டம், மதுரை பாண்டி கோவில் அருகே இருக்கும் துவாரகா பேலஸில் நாளை மாலை 4 மணிக்கு நடக்கவிருக்கிறது. கடந்த 2 முறை தேர்தலின் போதும் திமுகவுக்கு எதிராக சைலன்ட்டாக காய் நகர்த்திய மு.க அழகிரி, இந்த முறை திமுகவை எதிர்க்க கட்சி தொடங்குவாரா? என்ற பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

புதிய கட்சி தொடக்கமா? மு.க அழகிரி நாளை ஆலோசனை : 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு?

கேள்விகள் அனைத்திற்கும் நாளை நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டம் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் உட்பட 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், புதிய கட்சி தொடங்குவதா அல்லது மீண்டும் திமுகவில் இணைவதா? என்பது குறித்து ஆதர்வாளர்களுடம் மு.க அழகிரி ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

புதிய கட்சி தொடக்கமா? மு.க அழகிரி நாளை ஆலோசனை : 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு?

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எனது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும் என அறிவித்த மு.க அழகிரி, ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியாகவும் இந்த கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.