எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான் – முக அழகிரி

 

எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான் – முக அழகிரி

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் அரசியல் நிலைப்பாடு குறித்து மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய முக அழகிரி, “கூட்டத்தை பார்த்தவுடன் முடிவு செய்துவிட்டேன் சதிகாரர்களையும், துரோகிகளையும் எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்த கூட்டம். ஆதரவாளர்களாகிய உங்களுக்கு நான் கடமை பட்டுள்ளேன். உங்களோடு ஒருவனாக இருப்பதால் உங்களிடமிருந்து என்னை பிரிக்க முடியாது. என்னுடைய அழைப்பை ஏற்று இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை தந்துள்ள எனது தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். 1980 ஆம் ஆண்டு நான் மதுரைக்கு வந்து சேர்ந்தேன். வந்த நாள் முதல் உங்களோடு ஒருவனாக இருந்து பணியாற்றி வருகிறேன்.

எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான் – முக அழகிரி

தென்மாவட்டம் முழுவதும் பல கழகத் தோழர்கள் உடைய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கின்றேன். அவர்களது குடும்ப நிகழ்ச்சியாக இருந்தாலும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளேன். உங்களோடு ஒருவனாக நான் இருப்பேன் என்னை உங்களிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது. பல விரோத சக்திகள் சேர்த்து கலைஞரிடம் சொல்லி பேராசிரியர் அவர்களுக்கே தெரியாமல் என்னை கட்சியிலிருந்து நீக்கினர். இப்போதும் நான் உங்களில் ஒருவன் மதுரை கோட்டை , நமது கோட்டை இதை யாராலும் மாற்ற முடியாது. எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டை மாற்றியது நான். 1993ம் ஆண்டு கலைஞரை எதிர்த்து அவருக்கு துரோகம் செய்து விட்டு வைகோ வெளியே சென்றார்.

மதுரை 2001இல் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது அதில் நம்முடைய ஆதரவாளர்கள் அனைவரும் அதிமுக பலமாக உள்ளதாக தெரிவித்தனர், உடனே என்னுடைய தலைவர் கலைஞர் என்னை அழைத்தார், திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அப்போது திமுகவிற்கு பெரும்பான்மை கிடைத்தது. திருமங்கலம் தேர்தல் என்றால் இந்தியாவே பயப்படும், பயம் என்றால் நீங்கள் நினைப்பது போல் அல்ல. பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் திருமங்கலம் பார்முலா என கூறுகின்றனர் பணம் கொடுத்து வெற்றி பெற்றதாக கூறினர் ஆனால் நாங்கள் பணம் கொடுத்து திருமங்கலம் இடைத் தேர்தலில் வெற்றிபெறவில்லை உண்மையாக உழைத்து நாங்கள் வெற்றி பெற்றோம் என்னுடைய பேச்சைக் கேட்டு எனது ஆதரவாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்” என பேசினார்.