திமுகவுக்கு எதிராக மு.க.அழகிரி.. சர்ச்சையைக் கிளப்பிய ஆடியோ!

 

திமுகவுக்கு எதிராக மு.க.அழகிரி.. சர்ச்சையைக்  கிளப்பிய ஆடியோ!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் உற்று நோக்கப்பட்ட மூன்று முக்கிய புள்ளிகள் சசிகலா, ரஜினிகாந்த் மற்றும் மு.க.அழகிரி. அவர்கள் அரசியல் வருகையை எதிர்பார்த்து பலரும் காத்துக் கிடந்த நிலையில் மூன்று பேருமே அரசியலில் இருந்து விலகி விட்டனர். குறிப்பாக திமுகவுக்கு எதிராக தேர்தலில் களமிறங்குவேன் என குறிப்பால் உணர்த்திய மு.க.அழகிரியின் மவுனம், திடீர் திருப்பமாக அமைந்தது.

திமுகவுக்கு எதிராக மு.க.அழகிரி.. சர்ச்சையைக்  கிளப்பிய ஆடியோ!

தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என்று சொல்லிவிட்டு, மதுரையில் ஒரு மாபெரும் கூட்டத்தைக் கூட்டினார் மு.க.அழகிரி. அந்த கூட்டத்துக்கு பிறகு, தேர்தல் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. அச்சமயம், திமுகவில் இருந்து மு.க.அழகிரிக்கு தூது அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியானது. உடனே, மு.க.அழகிரி எனது அண்ணன் என ஒரு பேட்டியில் ஸ்டாலின் ஒரே போடாக போட்டார். இது மு.க.அழகிரியை சென்டிமென்ட்டாக தாக்கி அரசியலுக்கு வர விடாமல் தடுத்து விட்டதாக சொல்லப்பட்டது.

திமுகவுக்கு எதிராக மு.க.அழகிரி.. சர்ச்சையைக்  கிளப்பிய ஆடியோ!

இந்த நிலையில், மதுரையை சேர்ந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர் ஒருவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அந்த ஆடியோவில், உதய சூரியனுக்கு யாரும் ஓட்டு போட வேண்டாம் என அவர் சொன்னது போல இருக்கிறது. ஆனால், அப்படி ஒரு ஆடியோ வெளியிடப்படவில்லையென அந்த ஆதரவலாளரே தெளிவு படுத்துயிருக்கிறார். மு.க.அழகிரி மாற்று கட்சிக்கு ஓட்டு போடச் சொன்னதாக அவர் கூறியிருக்கிறார்.

திமுகவுக்கு எதிராக மு.க.அழகிரி.. சர்ச்சையைக்  கிளப்பிய ஆடியோ!

10 ஆண்டுகளாக ஆட்சியை நழுவ விட்டு தவித்துக் கொண்டிருக்கிறது திமுக. அக்கட்சியை உச்சத்துக்கே கொண்டு சென்ற கருணாதியும் இப்போது இல்லை. இந்த தேர்தல் தான் திமுகவுக்கு வாழ்வா? சாவா? என்பதை நிர்ணயிக்கப்போகிறது. இப்படி இருக்கும் சூழலில், திமுகவுக்கு எதிராக மு.க அழகிரி களமிறங்குவாரா என்பது புரியாத புதிராகவே இருக்கிறது..!