விவசாயிகள் நிதியில் முறைகேடு… தமிழக அரசு விசாரிக்க பா.ஜ.க வலியுறுத்தல்!

 

விவசாயிகள் நிதியில் முறைகேடு… தமிழக அரசு விசாரிக்க பா.ஜ.க வலியுறுத்தல்!


விவசாயிகள் நிதி உதவித் திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.
மதுரையில் பா.ஜ.க பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இன்று பா.ஜ.க-வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சீனிவாசனிடம் நிருபர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது அவர் கூறியதாவது:

விவசாயிகள் நிதியில் முறைகேடு… தமிழக அரசு விசாரிக்க பா.ஜ.க வலியுறுத்தல்!


“பிரதமரின் விவசாயிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இந்த பணம் முழுவதும் திரும்பப் பெறப்படும் என்று வேளாண்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் நிதியில் முறைகேடு… தமிழக அரசு விசாரிக்க பா.ஜ.க வலியுறுத்தல்!


பணத்தைத் திரும்பப் பெறுவதுடன் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், போலி பயனாளிகள், உடந்தையாக இருந்த அதிகாரிகள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேட்டில் சில அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாகத் தகவல் வருகின்றன. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புக்கள் திட்டமிட்டு பல ஆயிரம் போலி பயனாளிகளை இத்திட்டத்தில் சேர்த்து பல கோடிகளை கையாடல் செய்துள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
விவசாயிகள் உதவித் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் தொடர்பு

விவசாயிகள் நிதியில் முறைகேடு… தமிழக அரசு விசாரிக்க பா.ஜ.க வலியுறுத்தல்!

இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் உதவி பெற சான்றிதழ், பா.ஜ.க உறுப்பினர் அடையாள அட்டையுடன் வரவும் என்று பல பா.ஜ.க நிர்வாகிகள் வெளிப்படையாகவே விளம்பரம் செய்திருந்தனர். எனவே, தமிழக அரசு தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசின் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு கண்டறியப்பட்டும் பா.ஜ.க இந்த விவகாரத்தில் தீவிர ஆர்வம் காட்டாததே சந்தேகத்துக்கு காரணம் என்று பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.