“இது அரசியல் செய்யும் நேரம் இல்லை; மக்களை காக்கும் நேரம்” அமைச்சர் மா. சுப்பிரமணியன்

 

“இது அரசியல் செய்யும் நேரம் இல்லை; மக்களை காக்கும் நேரம்” அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“இது அரசியல் செய்யும் நேரம் இல்லை; மக்களை காக்கும் நேரம்” அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் 2,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 33 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 43 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.இந்த சூழலில் தமிழக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வெளிப்படைத் தன்மையோடு செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் கூறியுள்ளார்.

“இது அரசியல் செய்யும் நேரம் இல்லை; மக்களை காக்கும் நேரம்” அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில், “தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலின் வேகம் குறைந்துள்ளது; தடுப்பூசி மட்டும் தான் கொரோனாவிற்கு ஒரே தேர்வு. அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 61 ஆயிரம் பேருக்குதான் தடுப்பூசி செலுத்தப்பட்டது; ஆனால், திமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 1,61,297 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அரசு தவறு செய்கிறது என்று சுட்டிக்காட்டினால் சரி செய்யும். இது அரசியல் செய்யும் நேரம் இல்லை. மக்களை காக்கும் நேரம். நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முக்கிய தேவாலயங்கள் , கோயில்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்பது யூகம் தான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை குறைக்கவில்லை; தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயார் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார்.