பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அரியலூர் அரசு தலைமை‌ மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி வைத்தார்.

பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் இல்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “நடப்பாண்டில் 11 மருத்துவகல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ஆய்வுகள் முடிந்தவுடன் ஒன்றிய அரசு அறிவிக்கும். தடுப்பூசி மக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் கிடைப்பதற்கு தான் ஒன்றிய அரசு தரும் தடுப்பூசிகளை இருப்பு வைக்காமல் அந்தந்த மாவட்டத்திற்க்கு அனுப்படுகிறது.

11 புதிய மருத்துவகல்லூரி மருத்துவமணைகள் நடப்பாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு அந்த அந்த மருத்துவகல்லூரியில் ஆய்வு நடைபெற்றுகிறது. இதுவரை 7 கல்லூரிகளில் ஆய்வு நடைபெற்றுள்ளது. நாளை 2 கல்லூரியில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வுகள் முடிந்தவுடன் மாணவர் சேர்க்கை குறித்து ஒன்றிய அரசு அறிவிக்கும். 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் இல்லை” என தெரிவித்தார்.