அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா களத்திற்கு வராதது ஏன்?

 

அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா களத்திற்கு வராதது ஏன்?

விராலிமலை தொகுதியில் கடந்த இரண்டு முறையாகப் போட்டியிட்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து வெற்றிபெற்றார். மூன்றாவது முறையாக அங்கு மீண்டும் போட்டியிட்டார். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேர்தல் நடத்தை விதிகள் தடையாக உள்ளதாகவும் களத்தில் இறங்கி பணியாற்ற முடியவில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா களத்திற்கு வராதது ஏன்?

இதனிடையே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு ‘எக்மோ’ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீராக்க எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவேக்கின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது பற்றி கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. உங்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள். சிம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர்களிடம் பேசினேன். சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசுவருகிறேன். விரைவில் நீங்கள் குணமடைய வேண்டும் விவேக்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.