தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையா?.. அமைச்சர் சொல்லும் விளக்கம்!

 

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையா?.. அமைச்சர் சொல்லும் விளக்கம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கும் சூழலில், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ளன. மத்தியப் பிரதேசத்தில் ஆக்சிஜன் சப்ளை இல்லாததால் 6 கொரோனா நோயாளிகள் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு பல மாநிலங்கள் ஆக்சிஜனுக்காக திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையா?.. அமைச்சர் சொல்லும் விளக்கம்!

இந்த நிலையில் சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்கில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை. இனியும் இருக்காது ஆக்சிஜன் வசதியுடன் 32,405 படுக்கைகள் உள்ளன. எல்லாரும் ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனைக்கு செல்வதால் படுக்கை கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறினார்.

தொடர்ந்து தடுப்பூசி குறித்து பேசிய அவர், தமிழகத்தில் தடையின்றி தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடும்போது அதிக அளவில் வதந்தி பரப்புவது வாடிக்கையாக உள்ளது. தடுப்பூசி மருந்து வீணாகாமல் தடுக்க தேவையான அறிவுரைகளை வழங்கியுள்ளோம். கூடுதலாக 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் வருமென எதிர்நோக்கி உள்ளோம் என்றும் தெரிவித்தார்.