கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி – அமைச்சர் விஜயபாஸ்கர்

 

கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி – அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பாக 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடல் பயிற்சி மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தனர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் அவர்களை கட்டாயம் குணப்படுத்த முடியும். தலைமை நீதிபதியின் உடல் நிலை சீராக உள்ளது. அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி – அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட பரிசோதனை வெற்றியடைந்துள்ளது. இரண்டாம் கட்ட பரிசோதனை 6 மாதம் கழித்து செய்யப்படும். தமிழகத்தில் கொரோனோ தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. இதுவே எங்களின் வெற்றி. முககவசம் அணியாத 10 லட்சம் நபர்களுக்கு இதுவரை அபராதம் விதித்துள்ளோம். மழை காலங்களில் ஏற்படும் மலேரியா உள்ளிட்ட நோய்கள் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு 15 % குறைந்துள்ளது” எனக் கூறினார்.