ஆர்டிபிசிஆர் பரிசோதனையை மட்டுமே தமிழக அரசு நம்பியுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

 

ஆர்டிபிசிஆர் பரிசோதனையை மட்டுமே தமிழக அரசு நம்பியுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் மேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகக் கவசம் அணிவதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும், ஒருமுறை காய்ச்சல் ஒரு முறை இருமல் உடல் சோர்வு வந்தாலே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி போதுமான அளவுக்கு உள்ளது. ஆக்சிஜன் மிகை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகின்றது. தமிழகம் மட்டுமின்றி மேலும் இரண்டு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது. தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளன. 2000 மினி கிளினிக் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் தேவைக்கேற்ப தொடங்குவதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றது. விரைவில் தமிழக முதலமைச்சர் மினி கிளினிக்கை தொடங்கி வைப்பார். இந்த மினி கிளினிக் பொது மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

ஆர்டிபிசிஆர் பரிசோதனையை மட்டுமே தமிழக அரசு நம்பியுள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே 100% தரமான கொரோனா பரிசோதனை மேற்கொள்வது தமிழகம் மட்டும் தான். மற்ற எந்த பரிசோதனையையும் நம்பாமல் ஆர்டிபிசிஆர் பரிசோதனையை மட்டுமே தமிழக அரசு முழுமையாக செய்து வருகின்றது. அதேபோல் அதிகப்படியான பரிசோதனை செய்வதும் தமிழகம் தான். இதற்காகவே இந்திய பிரதமர் மோடி, தமிழகத்தை பாராட்டியுள்ளார்” எனக் கூறினார்.