தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77.8% குணமடைந்துள்ளனர். உயிர்காக்கும் மருந்துகள் தமிழகத்தில் உள்ளன. 57 பேருக்கு வெற்றிகரமாக பிளாஸ்மா சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகமான Rtpcr மையங்கள் தமிழகத்தில் உள்ளன. இன்று கூடுதலாக 3 மையங்கள் அமைக்கப்பட்டதையடுத்து மொத்த பிசிஆர் மையங்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகள் கொடுக்கக்கூடிய கட்டமைப்பு இங்கு உள்ளது. இதுவரை 2,08,786 பேர் குணமடைந்துள்ளனர். தேவையற்ற வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். திட்டமிட்ட தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது. உதயநிதியின் ட்வீட் தவறானது. திட்டமிட்ட தவறான தகவல்கள் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவர்களின் மன உறுதியை குலைக்க வேண்டாம். பீதியை, அச்சத்தை, பயத்தை விதைக்க வேண்டாம்” எனக் கூறினார்.