‘மூலிகை புத்தகத்தில் ஹிந்தி ஏன்’ மும்மொழி கொள்கைக்கு ஆதரவா? முக ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்!

‘மூலிகை புத்தகத்தில் ஹிந்தி ஏன்’ மும்மொழி கொள்கைக்கு ஆதரவா? முக ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்!

மும்மொழி கொள்கைக்கு அரசு ஆதரவு அளிக்கிறதா என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல அதிமுக அரசுக்கும் திமுகவுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் எழுந்து வருகின்றன. அதே போல முக்கியமான சில முக்கிய சட்டமசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில் சுகாதாரத்துறை சட்டப்பேரவையில் அளித்த மூலிகை புத்தகத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் சேர்த்து ஹிந்தியும் இடம்பெற்றிருந்தது.

‘மூலிகை புத்தகத்தில் ஹிந்தி ஏன்’ மும்மொழி கொள்கைக்கு ஆதரவா? முக ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்!

இது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், மூலிகை புத்தகத்தில் இந்தி ஏன்? மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஆதரிக்கிறதா? அதன் முன்னோட்டமா இந்த புத்தகம்? என சரமாரியாக கேள்விகளை முன்வைத்தார். மேலும், மாநில கல்வி உரிமையை பாதிப்பதாக புதிய கல்விக்கொள்கை இருப்பதால், அதனை பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

‘மூலிகை புத்தகத்தில் ஹிந்தி ஏன்’ மும்மொழி கொள்கைக்கு ஆதரவா? முக ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் பதில்!

மூலிகை புத்தகத்தில் இந்தி இருப்பது குறித்த முக ஸ்டாலினின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் தொடரும் என முதல்வர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார் என்றும் மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் வழங்கிய புத்தகம் என்பதால் அதில்இந்தி இடம்பெற்றுள்ளது என்றும் கூறினார்.