“தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் வேண்டாம்; அனுமதிக்காக காத்திருக்கிறோம்” – அமைச்சர் விஜய பாஸ்கர்!

“தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் வேண்டாம்; அனுமதிக்காக காத்திருக்கிறோம்” – அமைச்சர் விஜய பாஸ்கர்!

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சுகாரதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது டோஸை இன்று போட்டுக் கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகச்சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டிலேயே சில மாநிலங்களில் இந்த வைரஸ் தாக்குதல் சற்று அதிகரித்த நிலையிலும், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவால் தாக்குதலுக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை 500க்கும் குறைவாகவே உள்ளது.

“தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் வேண்டாம்; அனுமதிக்காக காத்திருக்கிறோம்” – அமைச்சர் விஜய பாஸ்கர்!

இருப்பினும், பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பொதுமக்கள் அனைவருமே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான அனுமதியை எதிர்நோக்கியுள்ளோம். தமிழகத்தில் நேற்று (பிப். 19) வரையில் சுகாதாரத் துறை, காவல்துறை, வருவாய்த்துறை என முன்களப் பணியாளர்கள் என 3.59 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.

“தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் வேண்டாம்; அனுமதிக்காக காத்திருக்கிறோம்” – அமைச்சர் விஜய பாஸ்கர்!

நான் இன்று கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டேன். இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியில் மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெறவில்லை என சிறு அச்சம் பரவலாக இருந்தது. அதற்காக நாமே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டேன். நான் நலமாக இருக்கிறேன். பொதுவாகவே தடுப்பூசி என்றாலே சில தவறான தகவல்கள் பரப்பப்படுவது வழக்கமாக உள்ளது. அதைச் சமாளித்து தான் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் தேவையில்லை.

“தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் வேண்டாம்; அனுமதிக்காக காத்திருக்கிறோம்” – அமைச்சர் விஜய பாஸ்கர்!

ஒருபுறம் வைரஸ் பரவல் குறைந்து வரும் சூழலில் மறுபுறம் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டால் எதிர்காலத்தில் வைரஸ் பாதிப்புகளை சிறப்பாகக் கையாள முடியும். தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. அவை உண்மையில்லை. மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்” என்றார்.