’’நான் உயிருடன் இருக்கும் வரை…’’ – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆவேசம்!

 

’’நான் உயிருடன் இருக்கும் வரை…’’ – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆவேசம்!

கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்கியது முதல் திருச்சி காந்தி மார்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் காந்தி மார்கெட்டை உடனடியாக திறக்க வேண்டும் என காந்தி மார்கெட் வியாபாரிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் காந்தி மார்கெட்டில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

’’நான் உயிருடன் இருக்கும் வரை…’’ – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆவேசம்!

அப்போது, கொரோனா பரவல் காரணமாக தான் காந்தி மார்கெட் மூடப்பட்டது. அது மீண்டும் நிச்சயம் திறக்கப்படும். நான் உயிருடன் இருக்கும் வரை, அ.தி.மு.க வில் இருக்கும் வரை, அமைச்சராக இருக்கும் வரை காந்தி மார்கெட் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படாது. அதே நேரத்தில் பல இடங்களில் புதிதாக மார்கெட் திறக்கப்படும் என உறுதியாக கூறினார்.

அங்கே அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

’’நான் உயிருடன் இருக்கும் வரை…’’ – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆவேசம்!

அதே நேரத்தில் 2018 ஆம் ஆண்டு கள்ளிக்குடி மார்க்கெட்டை அமைச்சர்கள் நேற்று வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தான் திறந்து வைத்தனர். ஆனால் தொலைவு மற்றும் வசதிகள் இல்லாத காரணத்தால் காந்தி மார்கெட் வியாபாரிகள் அங்கு செல்ல மறுத்தனர். இந்நிலையில் அமைச்சர் தற்போது காந்தி மார்கெட் இடமாற்றம் செய்யப்படாது என பேசி இருப்பது பலருக்கு. சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.