சுற்றுலாத்தலங்கள் திறப்பது எப்போது? அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதில்!

 

சுற்றுலாத்தலங்கள் திறப்பது எப்போது? அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதில்!

சுற்றுலாத்தலங்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. மால்கள், தியேட்டர்கள், பள்ளி கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன. 5 மாதங்களாக அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் அங்கு பணிபுரியும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியானது. அதனால் எல்லாத்தையும் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் திறக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சுற்றுலாத்தலங்கள் திறப்பது எப்போது? அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதில்!

அதன் படி கடந்த 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் உடனான ஆலோசனைக்கு பிறகு மால்கள், வழிபாட்டு தலங்கள், பூங்காக்களை திறக்கலாம் என முதல்வர் அறிவித்தார். ஆனால் அப்போது சுற்றுலாத் தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. சுற்றுலாத் தலங்கள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்த வண்ணம் இருக்கிறது.

சுற்றுலாத்தலங்கள் திறப்பது எப்போது? அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதில்!

இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு அனுமதி அளித்தால் தான் சுற்றுலாத் தலங்களை திறக்க முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், குற்றம் சொல்லியே பெயர் வாங்க ஸ்டாலின் நினைப்பதாகவும் அவர் கூறினார்.