குவியல் குவியலாக பரிசு பொருட்கள் : ஸ்டிக்கரால் சிக்கிய அமைச்சர்!

 

குவியல் குவியலாக பரிசு பொருட்கள் : ஸ்டிக்கரால் சிக்கிய அமைச்சர்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்றே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. அவற்றை அரசியல் கட்சியினர் முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை பறக்கும் படையினர் கண் கொத்திப் பாம்பாக நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், ஆளுங்கட்சியினரை சிக்க வைக்க எதிர்கட்சியினரும், எதிர்கட்சியினரை சிக்க வைக்க ஆளுங்கட்சியினரும் வழி மேல் விழி வைத்துக் காத்துக் கிடக்கிறார்கள்.

இந்த சூழலில், அதிமுக அமைச்சர் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பரிசுப் பொருட்களை திமுகவினர் பறக்கும் படையினரிடம் போட்டுக் கொடுத்துள்ளனர். திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் இருக்கும் குடோன் ஒன்றில் அதிமுக பரிசுப் பொருட்களை வைத்திருப்பதாக திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

குவியல் குவியலாக பரிசு பொருட்கள் : ஸ்டிக்கரால் சிக்கிய அமைச்சர்!

உடனே சம்பவ இடத்துக்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகள், அங்கிருந்த கம்பியூட்டர்கள் உள்ளிட்ட பொருட்களில் அமைச்சர் உதயகுமாரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்துள்ளனர். இது குறித்து போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய முற்படும் அதிமுக அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.