‘பாஜகவுடன் தொடர்ந்து சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருகிறோம்’..அமைச்சர் பேட்டி

 

‘பாஜகவுடன் தொடர்ந்து சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருகிறோம்’..அமைச்சர் பேட்டி

பாஜகவுடன் சகோதரத்துவம் மற்றும் நட்புடன் இருந்து வருவதாக அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியலித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகளிலும் கூட்டணி பிரச்னை எழுந்துள்ளது. குறிப்பாக அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பல கருத்து வேறுபாடுகள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது. கூட்டணியில் பிரச்னை இருப்பதாக முதல்வரோ அல்லது தமிழக பாஜக தலைவரோ கூறவில்லை. அதிமுக அமைச்சர்களுக்கும் பாஜக தலைவர் ஹெச் ராஜாவுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

‘பாஜகவுடன் தொடர்ந்து சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருகிறோம்’..அமைச்சர் பேட்டி

அதிமுக அரசை பற்றி ஹெச் ராஜா பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமாரும், பழைய நிகழ்வுகளை நினைத்து பாக்காமல் பேசுகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜுவும் கூறி வந்தனர். அதற்கு பதில் அளித்த ஹெச் ராஜா. அமைச்சர்கள் அளவு மீறி பேசினால் கூட்டணியில் பிரச்னை வரும் என்றெல்லாம் கூறினார். இவ்வாறு ஹெச் ராஜாவுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் பல கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது.

இந்த நிலையில், பாஜகவுடன் தொடர்ந்து சகோதரத்துவம், நட்புடன் இருந்து வருவதாக அமைச்சர் உதயகுமார் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ளுமாறு ஹெச்.ராஜா தினமும் எங்களை அறிவுறுத்தி வருகிறார் என்றும் கேஎஸ் அழகிரி மௌனம் கலைத்தால் தான் திமுக நிலைப்பாடு பற்றி தெரிய வரும் என்றும் அரசியல் நோக்கோடு இல்லாமல் ஜெயலலிதா, எம்ஜிஆர் போஸ்டர்கள் ஓட்டலாம் என்றும் கூறினார்.