அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் தங்கமணி

 

அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் தங்கமணி

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து, அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். ஆனால் அதிமுக- பாஜக கூட்டணியில் குழப்பம் இருப்பதாகவே இரு பிம்பம் இருந்துவந்தது.

அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் தங்கமணி

இந்நிலையில் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, “அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை, கூட்டணி பலமாக உள்ளது. அரசுமுறை பயணமாக தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அரசு சார்பில் வரவேற்பதோடு தோழமை கட்சி என்ற முறையில் அரசு விழாவிலும் பங்கேற்போம்.

தமிழகத்தில் பெய்து வரும் மழையால் மின் துறைக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, மழையால் மின்தேவை குறைவாக உள்ளது, கோவிட் காரணமாகவும் மின் பயன்பாடும் குறைவாக உள்ளதால் மின்பற்றாக்குறை ஏற்படாது” எனக் கூறினார்.