மாநிலத்துக்குள் பயணிக்க இனி நெகட்டிவ் ஆர்டி-பிசிஆர் அறிக்கை தேவையில்லை.. உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

மாநிலத்துக்குள் பயணிக்க இனி நெகட்டிவ் ஆர்டி-பிசிஆர் அறிக்கை தேவையில்லை.. உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு

மாநிலத்துக்குள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பயணிக்கும் மக்கள் இனி எதிர்மறையான ஆர்டி-பிசிஆர் அறிக்கை அல்லது விரைவு ஆன்டிஜென் அறிக்கையை கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை என்று உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.

உத்தரகாண்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்மாநில அரசு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள போதிலும், அம்மாநில அரசு ஊரடங்கை இன்று முதல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்துள்ளது. அதேசமயம் சில தளர்வுகளை வழங்கியுள்ளது. மாநிலத்தில் பயணிக்க இனி நெகட்டிவ் ஆர்டி-பிசிஆர் அறிக்கை தேவையில்லை உள்ளிட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது.

மாநிலத்துக்குள் பயணிக்க இனி நெகட்டிவ் ஆர்டி-பிசிஆர் அறிக்கை தேவையில்லை.. உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரிசோதனை

உத்தரகாண்ட் அமைச்சரவை அமைச்சர் சுபோத் யூனியல் கூறுகையில், மாநிலத்துக்குள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பயணிக்கும் மக்கள் இனி எதிர்மறையான ஆர்டி-பிசிஆர் அறிக்கை அல்லது விரைவு ஆன்டிஜென் அறிக்கையை கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. வாரத்தில் 6 நாட்கள் கடைகளை காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கலாம்.

மாநிலத்துக்குள் பயணிக்க இனி நெகட்டிவ் ஆர்டி-பிசிஆர் அறிக்கை தேவையில்லை.. உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு
ஊரடங்கு

இன்று முதல் நீர் பூங்காக்களை திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் 50 சதவீத திறன்களுடன் மட்டுமே இயங்க அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் இதர நிபந்தனைகள் ஊரடங்கு நீட்டிக்க ஒரு வார காலத்திலும் தொடரும் என்று தெரிவித்தார். உத்தரகாண்ட் அரசு அண்மையில் கொரோனா வைரஸ் 3வது அலை ஏற்படக்கூடும் என்ற பயம் காரணமாக கன்வார் யாத்திரையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.