சசிகலாவுக்கு போஸ்டர் ஒட்டியதெல்லாம் பெரிய விஷயமா? – அமைச்சர் விமர்சனம்!

 

சசிகலாவுக்கு போஸ்டர் ஒட்டியதெல்லாம் பெரிய விஷயமா? – அமைச்சர் விமர்சனம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி தற்போது அதிமுகவினருக்கு எதிரியாகி விட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு சிறைக்கு சென்றவுடனே அதிமுகவில் இருந்து அவரை நீக்கி அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்தது. இதனால், டிடிவி தினகரனும் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனிக்கட்சியை தொடங்கிவிட்டார்.

சசிகலாவுக்கு போஸ்டர் ஒட்டியதெல்லாம் பெரிய விஷயமா? – அமைச்சர் விமர்சனம்!

சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என அதிமுகவினர் திட்டவட்டமாக தெரிவித்து வரும் நிலையில், அதிமுகவுக்கு எதிராக தினகரன் போர்க்கொடியை உயர்த்தியுள்ளார். தேர்தல் நெருங்கி வருவதால் சசிகலாவை சிறையில் விரைந்து வெளியே எடுக்க முயன்ற தினகரன், அதனை செய்தும் காட்டி விட்டார். தமிழகம் திரும்பியவுடன் சசிகலா என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ? என அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது. இது ஒரு புறமிருக்க மறுபுறம், சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டும் அதிமுகவினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அண்மையில், 2 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

சசிகலாவுக்கு போஸ்டர் ஒட்டியதெல்லாம் பெரிய விஷயமா? – அமைச்சர் விமர்சனம்!

இந்த நிலையில் இது குறித்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், சசிகலாவுக்கு போஸ்டர் ஓட்டுவதெல்லாம் பெரிய விஷயமா?. நான் சொன்னால் நாளைக்கே ஒரு லட்சம் போஸ்டர் ஓட்டுவார்கள் என தெரிவித்திருக்கிறார். மேலும், சசிகலா ஒழிக என்று போஸ்டர் ஒட்ட எங்களாலும் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.