சேலத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக கூறிய 2 தனியார் ஆய்வகங்களுக்கு சீல்வைப்பு!

 

சேலத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக கூறிய 2 தனியார் ஆய்வகங்களுக்கு சீல்வைப்பு!

சேலம்

சேலத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக அறிவித்த 2 தனியார் ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதை நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள் 5 நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும், தொற்று அதிகமாக கண்டறியப்படும் பகுதிகளில் முகாம் நடத்தி, சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறினார்.

சேலத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தவறாக கூறிய 2 தனியார் ஆய்வகங்களுக்கு சீல்வைப்பு!

சேலம் மாவட்டத்தில் அரசு ஆய்வகத்தில் நாள்தோறும் 5,200 மாதிரிகளும், தனியார் ஆய்வகங்களில் 1,600 மாதிரிகளும் பரிசோதிக்கப்படுவதாகவும், அரசு ஆய்வக முடிவுகளில் 11 முதல் 12 சதவீதம் வரை தொற்று உறுதியாகும் நிலையில், தனியார் ஆய்வக முடிவுகளில் 51 சதவீதம் தொற்று உறுதியாவதாகவும் தெரிவித்தார். இதனால், அதிக பாசிடிவ் வந்த 2 தனியார் ஆய்வகங்களின் அறிவிக்கப்பட்ட மாதிரிகளை, அரசு ஆய்வகத்தில் மீண்டும் பரிசோதித்தபோது, அவை நெகடிவ் என முடிவு வந்ததாகவும் கூறினார்.

இதனால் முடிவுகளை தவறாக அறிவித்த சேலம் 5 ரோடு மற்றும் அஸ்தம்பட்டி அருகே செயல்படும் 2 தனியார் ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். மேலும், தவறு செய்யும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.