‘சர்க்கரை என்று காகிதத்தில் எழுதினால் இனிக்காது’… அதிமுகவை வெளுத்து வாங்கிய செந்தில் பாலாஜி!

 

‘சர்க்கரை என்று காகிதத்தில் எழுதினால் இனிக்காது’… அதிமுகவை வெளுத்து வாங்கிய செந்தில் பாலாஜி!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று மானியக் கோரிக்கையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான தங்கமணி, கொரோனோ காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் முந்தைய மாதக் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் மொபைலில் புகைப்படம் எடுத்து மின் கட்டணம் செலுத்தலாம் என்றும் அறிவித்தோம். ஆனால் திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு மே மாத கட்டணத்தை செலுத்த சொன்னதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

‘சர்க்கரை என்று காகிதத்தில் எழுதினால் இனிக்காது’… அதிமுகவை வெளுத்து வாங்கிய செந்தில் பாலாஜி!

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கட்டணத்தை செலுத்த மக்களுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாத கட்டணம், கடந்த ஆண்டு கட்டணம் மற்றும் மொபைலில் புகைப்படம் எடுத்து அனுப்பும் முறை என 3 வாய்ப்புகளை வழங்கினோம். மே மாதம் மின் உபயோகம் 32 சதவீதம் அதிகரித்து இருந்தாலும் குறைவாகவே கட்டணத்தை வசூலித்து இருக்கிறோம். அதே போல, கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பதும் முதலமைச்சரின் பேரில் நிறுத்தி வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மின் மிகை மாநிலமாக இருப்பதாக தெரிவித்த அதிமுக அரசு, ஏன் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புகள் வழங்கவில்லை? சர்க்கரை என்று காகிதத்தில் எழுதினால் இனிக்காது. திட்டங்களை செயல்படுத்தினால் தான் பலன் அளிக்கும் என்று காட்டமாக தெரிவித்தார். மேலும், வளர்ச்சி என்பது பூமியின் வளங்களை சிதைக்காமல், மாசு படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். புதிய அனல் மின் நிலையங்கள் எதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்றும் கூறினார்.