பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!

 

பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!

பள்ளிகள் தற்போதைக்கு திறக்கப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதப்போகும் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்த அரசு திட்டமிட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்புகள் எழுந்ததால், அந்த முடிவும் கைவிடப்பட்டது. இதனால், எப்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!

இன்றுடன் ஊரடங்கு நிறைவடைவதால், அடுத்த மாதத்திற்கான தளர்வுகளை முதல்வர் அறிவிக்கவிருக்கிறார். இந்த அறிவிப்பில் பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்ககூறுகள் தற்போதைக்கு இல்லை என தெரிவித்தார்.

பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்!

திறந்தவெளியில் பள்ளிகளை நடத்தினாலும் மாணவர்கள் பனி, வெயிலால் பாதிக்கப்படுவார்கள் என்றும் நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் சேர 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றும் கூறினார். மேலும், பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் இது தொடர்பான முதல்வரின் முடிவு இன்றைய அறிவிப்பில் தான் தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.