Home தமிழகம் “எம்ஜிஆா், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவா்கள் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி”

“எம்ஜிஆா், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவா்கள் வரிசையில் எடப்பாடி பழனிச்சாமி”

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் சமுதாய கட்டிடத்திற்கு பூமிபூஜை செய்து கட்டிடப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “சாதிக்கொரு கிணறு இருந்ததை மாற்றி அனைவரும் ஒரே கிணற்றில் தண்ணீா் எடுக்கலாம் என்ற நிலையை உருவாக்கியவா் மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆா். அவா் கொண்டுவந்த திட்டங்கள் மனிதநேயத்தோடு நிறைவேற்றப்பட்டுள்ளது. எம்ஜிஆர் சத்துணவை தந்து சாித்திரம் படைத்தாா். உள்ளாட்சி துறையில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தவா் ஜெயலலிதா. எம்.ஜி.ஆா், ஜெயலலிதா போன்ற மனித நேயமிக்க தலைவா்கள் வரிசையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளாா்.

நாடாளுமன்ற தோ்தலின் போது கல்விக்கடன், விவசாயக்கடன் ரத்து செய்யப்படும் என தொிவித்தனா் ஆனால் அவா்களால் தள்ளுபடி செய்ய முடியவில்லை. இரண்டு ஏக்கா் நிலம் தருவதாகவும் தொிவித்தனா் ஆனால் கையளவு நிலம் கூட தரவில்லை. பொய்யான வாக்குறுதிகளை தருவது தான் திமுகவினரின் வேலையாக உள்ளது. அரசு மக்களுக்கு எதை செய்யவேண்டுமோ அதை செய்துவருகிறது. திராவிடக்கழகம் பொியாரால் உருவாக்கப்பட்டது…

தோ்தல் அறிக்கை தாயாாிக்க முதல்வா் பல்வேறு ஆலோசனை நடத்திவருகிறார். தோ்தல் அறிக்கை எப்படி இருக்கப்போகிறது என்று நீங்கள் பாா்க்கத்தான் போகிறீா்கள்” எனக் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

234 இடங்களில், 17 இடங்களை காலி செய்த திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் மதிமுக, விசிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடந்து முடிந்து விட்டது. திமுக - மார்க்சிஸ்ட் இடையே...

ஓபிஎஸ் -ஈபிஎஸ் அறிவிப்பு : கடும் அதிருப்தியில் ஜான் பாண்டியன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தனித்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ. தேனிமொழி, மீண்டும் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு கொடுத்திருக்கிறார். அவருடன் 20க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு கொடுத்திருந்தாலும், ‘’50 ஆயிரம் வாக்குகள்...

அதிமுகவுடன் தொகுதி இழுபறி… தமிழகத்திற்கு கிளம்பிவரும் அமித்ஷா

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. 3ஆவது அணியாக...

ஸ்டாலின் சொன்ன சமாதானம்; ஏற்க மறுக்கும் உதயநிதி

உதயநிதிஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதற்கே வாரிசு அரசியல் என்ற விமர்சனம் கடுமையாக எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட திமுகவின் வாரிசு அரசியலை சாடி...
TopTamilNews