ஆன்லைனில் அரையாண்டு தேர்வுகளா?- அமைச்சர் செங்கோட்டையன்

 

ஆன்லைனில் அரையாண்டு தேர்வுகளா?- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கடந்த 7 மாத காலமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. அதேசமயம் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவெடுத்த நிலையில், பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டத்தின் சாதகமற்ற பதிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போய்கொண்டிருக்கிறது.

ஆன்லைனில் அரையாண்டு தேர்வுகளா?- அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் ஈரோடு மாநிலம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன், “ அரையாண்டு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்ற தகவல் தவறானது. பள்ளிகளில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து திங்கட்கிழமை முதல்வரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது. 5 நாட்களில் பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பு வெளியிடப்படும். அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் தேர்தல் குழுவின் வழிகாட்டுதல் படி துவங்கும். தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறுவது மக்கள் கையில் தான் உள்ளது. அது தேர்தல் முடிவுக்கு பிறகு தான் தெரியும். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து இதுவரை முதல்வரிடம் ஆலோசனை நடத்தவில்லை. புயல் நிவாரணம் குறித்து குற்றஞ்சாட்டும் மு.க ஸ்டாலின் மேயராக இருந்த போது மழை பாதிப்புகள் அவருக்கு தெரியாமல் போனது ஏன்?” எனக் கூறினார்.