ரேஷன் கார்டு காட்டினால் கூட்டுறவு வங்கியில் ரூ.50,000 கடன் – அமைச்சர் செல்லூர் ராஜூ

 

ரேஷன் கார்டு காட்டினால் கூட்டுறவு வங்கியில் ரூ.50,000 கடன் – அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சத்து மாத்திரை மற்றும் கபசுரக்குடிநீர் பொடிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி முதலமைச்சர் உத்தரவுப்படி எளிமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி 50,000 ரூபாய் கடன் யார் வேண்டுமாலும் வாங்கிக்கொள்ளலாம். ரேஷன் கார்டு மட்டும் காட்டி கடனை பெற்றுக்கொள்ளலாம். பத்து இருபது பேருக்கு உதவி செய்து விட்டு, லட்சக்கணக்கில் உதவியதாக திமுக கூறுவது போல, ஒரு சில மனுக்களை வைத்துக்கொண்டு லட்சணக்கில் புகார் மனுக்கள் பெற்றுள்ளோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். இக்கட்டான நேரத்தில் முதலமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் குறை கூறும் ஸ்டாலினை பற்றி மக்கள் தெரிந்து கொள்ளாவார்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுள்ளனர்.இந்தியாவில் ஊரடங்கு தோல்வி என்று கூறிய ராகுல்காந்தி தமிழகத்தின் ஊரடங்கை பற்றி குறிப்பிட்டு பேசியிருக்க மாட்டார்.

ரேஷன் கார்டு காட்டினால் கூட்டுறவு வங்கியில் ரூ.50,000 கடன் – அமைச்சர் செல்லூர் ராஜூ

கூட்டுறவுத்துறையால் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடனை 6 மாதத்திற்கு கட்ட தேவையில்லை. கூட்டுறவு வங்கியில் ஒரு கிராம் தங்கத்திற்கு 3000 ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்குவது போல வேறு எந்த மாநிலமும் மக்களுக்கு கடனுதவி வழங்கவில்லை. வெட்டுக்கிளிகளை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு விரிவான ஆலோசனை நடத்தி வருகிறது. வெட்டுக்கிளிகள் தடுக்கும் வகையில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக்கூறினார்.