முதலமைச்சர் ஓபிஎஸ் எனக் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ!

 

முதலமைச்சர் ஓபிஎஸ் எனக் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ!

முதலமைச்சர் ஈபிஎஸ் என சொல்வதற்கு பதில் ஓபிஎஸ் என தவறாக கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஹிட்லர் ஆட்சியில் கூடதான் நடந்தது எனக் கூறினார். கொரோனா காலத்திலும் முதலமைச்சர் ஓபிஎஸ் சிறப்பாக பணியாற்றினார் என பதற்றமாக கூறிவிட்டு, பின் தடுமாறி, ஈபிஎஸ் என மாற்றி கூறினார்.

முதலமைச்சர் ஓபிஎஸ் எனக் கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ!

தொடர்ந்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, “ஒவ்வொரு மாவட்டமாக முதலமைச்சர் சென்று ஆய்வு நடத்தினார். இந்தியாவில் எந்த முதலமைச்சரும் நேரடியாக சென்று ஆய்வு பணிகளை செய்ததில்லை. தன் உயிரையும் துச்சமாக மதித்து பணியாற்றினர். மக்கள் தான் எஜமானர்கள். ஆகவே வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” எனக் கூறினார் .