அதிமுகவிற்கு பாஜக என்றுமே ‘நண்பன்டா’… அமைச்சர் செல்லூர் ராஜூ

 

அதிமுகவிற்கு பாஜக என்றுமே ‘நண்பன்டா’… அமைச்சர் செல்லூர் ராஜூ

புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜு தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய, “தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்களை அ.தி.மு.க. அரசு செய்து உள்ளது. ஆகவே வரும் தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும். நடிகர்கள் ஆரம்பிக்கும் கட்சிகள் எல்லாம் நிலைத்து நிற்காது. கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து கொண்டிருக்கிறார், மூன்று நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவார், அதன் பிறகு பிக்பாஸ் சூட்டிங்கிற்கு சென்றுவிடுவார், அடுத்து அவரது படம் தயாராக இருக்கிறது அந்த படத்தின் சூட்டிங்கிற்கு சென்று விடுவார். ஆனால் அரசியலுக்கு அரசியலில் மக்களின் எதிர்பார்ப்பை செய்து கொடுக்க எங்களை போன்ற அரசியல்வாதிகள் இருக்கிறோம். ஆகவே கமல்ஹாசன் போன்றவர்களுக்கு அரசியல் ஒத்து வராது.

அதிமுகவிற்கு பாஜக என்றுமே ‘நண்பன்டா’… அமைச்சர் செல்லூர் ராஜூ

நான் நாட்டை திருத்த போகிறேன் என கமல் சொல்ல முடியாது அவர் உலக நாயகன் அவரால் நடிக்க மட்டுமே முடியும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட கூட்டத்திலேயே அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பா.ஜ.க. பாறை போல ஆதரவு கொடுக்கும் என கூறி விட்டு திமுகவை கிழி கிழி என கிழித்தார்கள், பிரதமர், அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.கவை சேர்ந்த அனைவரின் ஆதரவையும் பெற்று அ.தி.மு.க.ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க – பா.ஜ.க., கூட்டணி நிலைத்து நிற்கும். அரசியல் காரணங்களுக்காக முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை பேச்சு எழுந்து வருகிறது. பா.ஜ.க. அ.தி.மு.க.விற்கு என்றைக்கும் நண்பேண்டா என பஞ்ச் டயலாக் பேசினார்.