Home அரசியல் ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம்- அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி

ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம்- அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள மதுரைக்கு வரும் முதல்வருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக மூன்றாவது முறையாக சந்திக்க உள்ள தேர்தல் இது, பத்தாண்டு ஆட்சியில் இருந்துவிட்டு மக்களை சந்திக்க போகிறோம். மக்கள் அரசின் மீது ஒரு குற்றம் குறைக்கூட சொல்லவில்லை. அது தான் எதிர்க்கட்சிகளுக்கு ஆண்டவன் போட்ட பிரேக். தீயசக்தியை கட்டுப்படுத்த அமானுய சக்தி இருப்பது போல கொரானா வந்துவிட்டது. ஒரு நன்மையும் செய்யாத கட்சி, மக்கள் விரோத கட்சி திமுக தான். எதையோ பேசி என்னமோ நாடகம் போட்டு பார்க்கிறார் ஸ்டாலின். அரசை குறை கூற ஏதாவது சிக்குமா என பார்க்கிறார். எதுவும் கிடைக்கவில்லை என்பதால் கோபத்தில் உள்ளார்.

ஜெயலலிதா இல்லாத போதும் சாதுர்யமாக செயல்பட்டு கட்சியை மட்டுமல்ல, நிலையான ஆட்சியையும் நடத்தி காட்டியவர் எடப்பாடி. சட்டமன்றத்தில் ரகளையில் ஈடுபட்ட போதும் நம்பியார் போல சிரித்துக்கொண்டு, கடந்து சென்றோம். சட்டையை கிழித்துக்கொண்ட போது ஸ்டாலினுக்கு போன இமேஜ் இன்னும் திரும்ப வரவில்லை. ஒவ்வொரு விஷயத்திலும் முதலமைச்சர் கோல் போட்டு வருகிறார்.

எதிர்க்கட்சித்தலைவர் விவசயி வேடம் போடுகிறாராம். இதையெல்லாம் சிவாஜி பார்த்தால் என்ன செய்வார். ஸ்டாலினுக்கு ஒரு விவசாயியாக கூட நடிக்கத்தெரியவில்லை. உண்மை விவசாயிக்கும், நடிக்கும் விவசாயிக்கும் வித்தியாசம் உள்ளது. வடிவேலு சொல்வதை போல வரவில்லை என்றால் விட்டு விட வேண்டியது தானே. ஜெயலலிதா மரணத்திற்கு திமுகவே காரணம். மக்கள் மறதியை வைத்து ஆட்சிக்கு வரலாம் என திமுக நினைக்கின்றனர். ஜெயலலிதா மீது பொய் வழக்குப் போட்டு அவரை வேதனைப்படுத்தியவர்கள் திமுகவினர். ஜெயலலிதாவுக்கு மெரினாவில் கூட இடம் தரக்கூடாது என வழக்கு போட்டு அரசியல் செய்தவர். ஆனால் தற்போது ஜெயலலிதா இறப்புக்கு நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். அவர்களை அதிமுகவினர் நம்பக்கூடாது. திமுக என்ற தீயசக்தியை ஒழிக்க வேண்டும்” என்று வசைப்பாடினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

அரசுப்பேருந்து சாலையில கவிழ்ந்து விபத்து; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரோடு ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்திற்கு உள்ளானதில் 35 பேர் படுகாயமடைந்தனர்.

சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

திருப்பத்தூர் ஜோலார்பேட்டையில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

திண்டுக்கல் திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் வெட்டிகொல்லப்பட்ட வழக்கில் கைதான 4 பேர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி திண்டுக்கல்...

கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி களம்காண வேண்டும்- கார்த்தி சிதம்பரம்

பிரபல தொழில் அதிபரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான வசந்தகுமார் கடந்த ஆகஸ்டு மாதம் 28-ம் தேதி மரணமடைந்தார். அவரது.மறைவை அடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியாக இருக்கிறது. அத் தொகுதிக்கு பிப்ரவரி...
Do NOT follow this link or you will be banned from the site!