“வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் தைரியமாக வாக்கு கேட்கிறோம்” – அமைச்சர் செல்லூர் ராஜு

 

“வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் தைரியமாக வாக்கு கேட்கிறோம்” – அமைச்சர் செல்லூர் ராஜு

வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் மக்களிடம் தைரியமாக வாக்கு கேட்கிறோம் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக தேர்தல் அறிக்கைக் குழு கூட்டத்தை நடத்தி முடித்து விட்டது. அதிமுகவிலோ முதல்வர் வேட்பாளர் பிரச்னை, கட்சிக்குள் கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் தேர்தல் பணிகள் தாமதம் ஆனது. இருப்பினும் தேர்தல் பணிகளை விரைந்து தொடங்குமாறு ஓபிஎஸ் உத்தரவிட்டிருக்கிறார்.

“வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் தைரியமாக வாக்கு கேட்கிறோம்” – அமைச்சர் செல்லூர் ராஜு

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் அரியணை ஏறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் மக்களிடம் தைரியமாக வாக்கு கேட்கிறோம் என தெரிவித்தார்.

மேலும், எல்லா கட்சிகளும் கோட்டையில் இருந்த மக்களை பார்த்தார்கள் என்றும் அதிமுக மக்களிடமிருந்து கோட்டையை பார்த்தது என்றும் விமர்சித்தார்.