“அழகிரியை புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்று” : அமைச்சர் செல்லூர் ராஜூ

“அழகிரியை புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்று” : அமைச்சர் செல்லூர் ராஜூ

அழகிரியை புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்று என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“அழகிரியை புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்று” : அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட மு.க.அழகிரி கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சி பணிகளை மேற்கொள்ளாமலே இருந்து வந்தார். தற்போது சட்டபேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுகவை ஆட்டம் காண வைக்க மீண்டும் களமிறங்கியுள்ளார் அழகிரி. இதனால் அவர் விரைவில் ஆதரவாளர்களுடன் பேசி தனிக்கட்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அழகிரியை புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்று” : அமைச்சர் செல்லூர் ராஜூ

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, “வழக்கமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பது தவறான கண்ணோட்டம். 1980ல் நாடாளுமன்றத்தில் அதிமுக 2 இடங்கள் மட்டுமே பிடித்தது. ஆனால் சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியை பிடித்தது. தங்கத்தை தோண்டி எடுக்கும் நாடுகளில் கூட தாலிக்கு தங்கம் வழங்கியது கிடையாது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. கலைஞரை போல் செயல்படுபவர் அழகிரி. அழகிரி கட்சி துவங்கினால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும். அழகிரியை புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்று” என்றார்.