“அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் தான்” – வானதி சீனிவாசனின் சந்தேகத்தை தீர்த்த அமைச்சர் சேகர்பாபு!

“அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் தான்” – வானதி சீனிவாசனின் சந்தேகத்தை தீர்த்த அமைச்சர் சேகர்பாபு!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அனைத்துத் துறைகளும் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக அறநிலைய துறை அமைச்சகத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் கவனம் பெற்று வருகின்றன. அதற்குக் காரணம் திமுகவை இந்துக்கள் விரோதி என பாஜக பிரச்சாரம் செய்தது. அதுமட்டுமில்லாமல் ஜக்கி வாசுதேவ் கோயில்களைத் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என பரப்புரை செய்துவந்தார். இதனால் அமைச்சர் சேகர்பாபுவின் நகர்வு என்ன என்பதில் எதிர்பார்ப்பு கிளம்பியது.

“அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் தான்” – வானதி சீனிவாசனின் சந்தேகத்தை தீர்த்த அமைச்சர் சேகர்பாபு!

அதனைப் பூர்த்தி செய்யும் விதமாக அறநிலையத் துறை நிர்வாகப் பணிகள் புயல் வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. அதேபோல ஒருசில அறிவிப்புகளையும் வெளியிட்டு ஷாக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப் பயிற்சி அளிப்பது, பெண்களும் அர்ச்சகராகலம் ஆகிய அறிவிப்புகளை சேகர்பாபு கூறியிருந்தார். இதனை பாஜக தலைவர் எல்.முருகன் வரவேற்றார். ஆனால் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்திருந்தார்.

“அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் தான்” – வானதி சீனிவாசனின் சந்தேகத்தை தீர்த்த அமைச்சர் சேகர்பாபு!

“இந்துக்களுக்கும், இந்துக் கடவுள்களுக்கும் எதிரானவர்கள் திமுகவினர் என நான் சொல்லவில்லை. அக்கட்சியின் தலைவர்களே சொல்லி இருக்கின்றனர். எனவே, கோயில்கள் விஷயத்தில் திமுக அரசு காட்டும் முனைப்பு தன்னிச்சையானதா, உண்மையாகவே இவர்களுக்கு ஆர்வம் இருந்து செய்கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், அவர்களின் கடந்த கால வரலாறு அப்படி. தமிழ்நாடு அரசு உண்மையாகவே இந்துக் கோயில்களின் மீது அக்கறை இருந்தால், கோயில் சொத்துகள், நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களிடம் இருந்து மீட்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

“அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் தான்” – வானதி சீனிவாசனின் சந்தேகத்தை தீர்த்த அமைச்சர் சேகர்பாபு!

இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாக தான் தெரியும். ஆன்மிகம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்ய துடிக்கும் சக்திகளுக்கு இதுபோன்ற செயல்பாடுகள் சந்தேகத்தைத் தான் ஏற்படுத்தும். ஆனால், வார்த்தை ஜாலங்களுக்காக இல்லாமல் நிச்சயமாகச் செயல்படுத்தக் கூடிய திட்டங்களைத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவிக்கிறது” என்றார்.