‘அதிமுகவில் சேர்ந்து எம்ஜிஆர்-ஐ உரிமை கொண்டாடலாம்’ : கமலுக்கு அமைச்சர் பதிலடி!

‘அதிமுகவில் சேர்ந்து எம்ஜிஆர்-ஐ உரிமை கொண்டாடலாம்’ : கமலுக்கு அமைச்சர் பதிலடி!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி பிரச்சாரத்தை தொடங்கியிருக்கும் கமல்ஹாசன், தமிழக அரசை விமர்சித்து பல கருத்துக்களை முன்வைத்து வருகிறார். ‘நியாயப்படி எம்.ஜி.ஆர் எங்களின் சொத்து, பேனரில் அவரது போட்டோவை சிறியதாக்கிய கட்சி தற்போது என்னை எதிர்க்கின்றது. ஏழ்மையை ஒழிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் முயற்சியை நிறைவேறிவிட்டால் அவருடைய அடுத்த வாரிசு நான் தான்’ என பிரச்சாரத்தின் போது கூறியிருந்தார்.

‘அதிமுகவில் சேர்ந்து எம்ஜிஆர்-ஐ உரிமை கொண்டாடலாம்’ : கமலுக்கு அமைச்சர் பதிலடி!

இதற்கு அதிமுகவினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எம்ஜிஆரின் பெயரை முன்வைத்து அதிமுக வாக்குகளை கலைக்க முடியாது என்றும் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்ட கைகள் வேறு எந்த கட்சிக்கும் ஓட்டு போடாது என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், எம்ஜிஆரை முன்னிறுத்தி கமல்ஹாசன் பேசுவது குறித்து அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

‘அதிமுகவில் சேர்ந்து எம்ஜிஆர்-ஐ உரிமை கொண்டாடலாம்’ : கமலுக்கு அமைச்சர் பதிலடி!

அப்போது பேசிய அவர், கமல் விரும்பினால் அதிமுகவில் சேர்ந்து எம்ஜிஆரை உரிமை கொண்டாடலாம் என்றும் அதிமுகவை தள்ளி வைத்துவிட்டு எம்ஜிஆரை உரிமை கொண்டாடும் கமலின் வசனங்கள் மக்களிடம் எடுபடாது என்றும் தெரிவித்தார்.