அதிமுக அரசு 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் போராட்டங்களை சந்தித்து உள்ளது: அமைச்சர் ஆர்பி உதயகுமார்

 

அதிமுக அரசு 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் போராட்டங்களை சந்தித்து உள்ளது: அமைச்சர் ஆர்பி உதயகுமார்

நெல்லையில் வருகின்ற சட்டமன்ற தேர்தல் வியூகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ஒரு சாமானியராக முதல்வர் செயல் படுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கமலஹாசன் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார், நாடு முழுவதும் அதிமுகவிற்கு ஆதரவு அலை வீசிக் கொண்டிருக்கிறது இது தான் இன்றைய கள நிலவரம், எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் எங்களது பிரச்சாரம் அமையும். ஓய்வு பெற்றவர்கள் தற்போது அரசியலுக்கு வந்து ஒப்பாரி வைக்கின்றனர். எந்த சூழ்நிலையிலும் பங்களிப்பு இல்லாமல் கடமை ஆற்றி கொண்டு இருப்பவர்கள் மீது சேற்றை வாரி அடிக்கின்றனர்.

அதிமுக அரசு 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் போராட்டங்களை சந்தித்து உள்ளது: அமைச்சர் ஆர்பி உதயகுமார்

தமிழக முதல்வர் செய்த, செய்து கொண்டிருக்கும் திட்டங்களுக்கு மாற்றாக கமலஹாசன் போன்றவர்கள் புதிதாக வந்து என்ன திட்டங்களை கொடுக்கப்போகிறார்கள் ? அவர்கள் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள்? நாங்குநேரி காங்கிரஸ் தொகுதியை எப்படி அதிமுக வெற்றி பெற்றதோ அதே போல் நெல்லை, பாளையங்கோட்டை தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக நடத்தும் போராட்டம் பலிக்காது. எதிர்க்கட்சியின் தூண்டுதலே விவசாயிகளின் போராட்டம் நடைபெறுகிறாது. வட மாநிலங்களில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் வேறு, தென் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் நடைபெறும் போராட்டங்கள் என்பது வேறு.

அதிமுக அரசு 4 ஆண்டுகளில் 40 ஆயிரம் போராட்டங்களை சந்தித்து உள்ளது. இந்த போராட்டங்கள் அனைத்தும் எதிர்கட்சி தூண்டுதலால் நடைபெற்றது. எம்.ஜி.ஆரின் சொந்த வீடு அதிமுக, புதிதாக வீடு கட்டியவர்கள் அந்த உரிமையை எடுக்க முடியாது. எம்.ஜி.ஆர் அதிமுகவிற்கே சொந்தம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்த தேவையில்லை, புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் நடைபெற்று பணிகள் துவங்கும்” எனக் கூறினார்.